அக்கரைப்பற்று நீதிமன்ற குடிநீர்ப் பிரச்சினைக்கு, ஒரு தசாப்த காலத்தின் பின்னர் தீர்வு








அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில் இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு 11 வருட காலத்தின் பின்னர் எட்டப்பட்டுள்ளது 


அக்கரைப்பற்று பிராந்தியத்தில், கடந்த 2007ம் ஆண்டு முதல்   குடி நீர் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னரான காலப்ப பகுதியில், அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்திற்கும் நீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில்,புதிதாக மாவட்ட நீதிமன்ற மாடிக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இதற்கென பிரத்தியேக நீர்த்தாங்கியும் நிறுவப்பட்டிருந்தது.இருப்பினும், உரிய வேகத்தில் நீர் வந்து சேராததனால், 100 இற்கும் அதிகமான நீதிமன்ற ஊழியர்களும், 30 இற்கும் அதகமான சட்டத்தரணிகளும்,சில  நீதிபதிகளும் நீரை உரிய வேளையில் பெற்றுக் கொள்வதில் சிரமங்களைச் சந்தித்தனர்.நீரைப்  பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் சந்தித்தனர்.

இந்தப் பிரச்சினைக்கான தீர்வு, அக்கரைப்பற்று நீதிமன்ற  வளாகத்தினுள் வினியோகிக்கப்படும் தண்ணீரின் கன அளவு மற்றும் அதன் வேகமானது போதாது என்ற காரணத்தை அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் கடந்த 9 மாத காலப் பகுதியில் இனங்கண்டிருந்தார். 

அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல்  சபையின் துணைகொண்டு, அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், இதுகாறும் காணப்பட்டிருந்த பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒரு தசாப்த வருட காலத்தின் பின்னர், இன்றைய தினம் 2 அங்குல கனமுள்ள நீர்க்குழாயினுடாக அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்திற்கு அதி வேகத்தில் நீரானது வினியோகிக்கப்பட்டுள்ளது.