வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்,உயிரிழ ப்பு








 பொலன்னறுவை புலஸ்திபுர விஜித ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலனறுவை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த திடீர் மரணம் தொடர்பில் பொலனறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.