பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment