சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனையில்




 


(எம்.என்.எம்.அப்ராஸ்)


ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் ஐக்கிய மககள் கூட்டணியின் கல்முனை தேர்தல் காரியாலய திறப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை(10)இடம்பெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில்,முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை காசிம் வீதியில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றது. 

இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசால் காசிம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர்,முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் ஏ.எம்.ரகீப்,ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை அமைப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.ரசாக்,கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் இளைஞர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.