கல்முனை தமிழரசு கட்சி கிளை சஜித்துக்கு




 


( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கை தமிழரசுக் கட்சியின் கல்முனைக்கிளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக் கிளை ஆலய நிர்வாகங்கள் மற்றும் கல்முனையின் பிரதான பொது அமைப்புக்களுடான சந்திப்பு முன்னதாக இடம் பெற்றது.

பின்னர் தொகுதிக்கிளையின் ஒன்றுகூடல் நேற்று  கிளைத் தலைவர் அருள்.நிதான்சன் தலைமையில் இடம் பெற்றது.

அதில்  கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று முடிவெடுத்துள்ளது.

ஆனால் கட்சி மத்திய குழுவும் தலைமையுமே கல்முனைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் . மேலும்  சஜித் பிரேமதாச நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கூறிய வாய்மொழி உடன்பாட்டினை வரவேற்கிறது.

 
சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதன் அடிப்படையிலும் கல்முனை மக்களை நேற்று வரை ஒன்பது வருடங்கள் ரணில் விக்கிரமசிங்க வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் அவருக்கு ஆதரவை நிராகரிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்முனை தொகுதி தமிழரசு கட்சி கிளைத் தலைவர் அ.நிதான்சன் தெரிவித்தார்.

மேலும் சஜித் பிரேமதாசவின் தரப்பின் வெற்றியில் நாமும் பங்குதாரர் ஆகவில்லை எனின் கல்முனைக்கு எதிரான சக்தி தனிப்பலம் பெற்று கல்முனையை ஆக்கிரமிக்கும் என்பதாலும் அதனை தடுக்கும் நோக்கிலும் வெற்றியின் பங்குதாரராக கல்முனை வாழ் தமிழ் மக்களையும் நிலைநிறுத்த இத் தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டது என தெரிவித்தார்