தாய்மார்களின் பிரார்த்தனைகளுடன் தேர்தல் பணிகளை ஆரம்பித்த மக்கள் காங்கிரஸ் !





 தாய்மார்களின் பிரார்த்தனைகளுடன் தேர்தல் பணிகளை ஆரம்பித்த மக்கள் காங்கிரஸ் !


எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெற போகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார பணிகளை திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் தாய்மார்களின் பிரார்த்தனைகளோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம். சபீஸ் தனது பிரச்சார பணிகளை நேற்று சனிக்கிழமை ஆரம்பித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து தனது மயில் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக உள்ள நிலையில் தனது கட்சியின் பாராளுமன்ற ஆசனத்தை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ள மக்களுக்கு பழக்கமான புதிய முகங்கள் பலரையும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்க ஆலோசித்து வருகிறது.

கடந்த இரண்டு தடவைகள் அம்பாறைக்கு கிடைக்கப்பெற்ற ஆசனங்கள் உடனடியாக கட்சி மாறிச் சென்ற வரலாறுகள் இருக்கத்தக்கதாக இம்முறை பல்வேறு நிபந்தனைகளுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல வில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.