*ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விசேட அறிவிப்பு




 



ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.


வாக்குகளை என்னும் பணியில் எந்த தலையீடும் இருக்காத வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செயற்படவேண்டும் என்பதுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பென்றும் தேசிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.