கல்முனை ஸாஹிரா கல்லூரி வரலாற்று சாதனை வெற்றி





 நூருல் ஹுதா உமர்


கல்வி அமைச்சினால் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சாரப் போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (07,08/09/2024) கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. வலய மட்டம், மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற கல்முனை ஸாஹிரா கல்லூரி கலிகம்பு கலை அணியினர் அகில இலங்கை தேசிய மட்ட போட்டியிலும் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்று saaதனையை புரிந்துள்ளனர்.

இவ் வரலாற்று வெற்றியை பெற்றுத் தந்த மாணவர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச்சென்ற கல்லூரியின் விளையாட்டு துறை பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர் , எம்.வை.எம்.றகீப் அவர்களுக்கும் பயிற்சி வழங்கிய எம்.பைஸர் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இவ் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த  மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனை,  வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கும் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.