Rep/KalkudaNation
ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் நிப்ரான்
தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை!
(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் எம்.எப்.எம்.நிப்ரான் தேசிய மட்ட கணித வினா விடை - கணித புதிர் போட்டியில் பங்குபற்றி தேசியத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட கணித வினா விடைப் போட்டியில் 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் ஒன்றான கணித புதிர் போட்டியில் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதில், கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றிய ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் எம்.எப்.எம்.நிப்ரான் தங்க பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தேசியத்தில் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற மாணவனுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்கள் ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment