செட்டியூர் சிந்தனைச் செல்வன் கவிஞர் மயில்வாகனம் அதிபர் அவர்களின் 86 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு கவிஞர் மயில்வாகனம் கலைப்பணி மன்றத்தினால் "கவிஞரின் வாழ்க்கை பயணத்தை" அடிப்படையாகக் கொண்டு அவரோடு வாழ்ந்தவர்கள் மற்றும் அவரது கலை பாசறையில் விளைந்த முத்துக்களின் கனதியான வார்த்தை பெறுமதியினால் கவிஞரின் படைப்புலகம் நிஜக் கண்முன்னே பிரமித்து நிற்கின்றது.
இவ் வெளியீட்டு நிகழ்வை கடந்த வியாழக்கிழமை(5) அன்று Online ஊடாக கவிஞர் மயில்வாகனம் கலைப்பணி மன்றத்தின் தலைவரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமாகிய திரு.எம் கோபாலரத்தினம் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையத்தில் சிந்தனைச் செல்வன் என்ற புனைபெயர் கொண்ட கவிஞர் க. மயில்வாகனம் ஆவார்.அவர் கவிதையோடு மட்டுமன்றி நாடகம், நாட்டுக் கூத்து, நாட்டிய நாடகம், வசந்தன், கும்மி, கோலாட்டம் போன்ற கலைகளில் வல்லவராக திகழ்ந்தார்.
மட்/செட்டிபாளையம் பாடசாலையில் அவர் பணிபுரிந்த காலம் (1971-_1983) சிறப்பானதாகும்.இவரது படைப்புக்கள் கவிதை, பாடல், நாடக இயக்கம், நாட்டுக்கூத்து என விரிந்தவெளி கொண்டவை. மாணவர் மன்றங்கள், வாணிவிழா நிகழ்வுகள், பாடசாலைகளுக்கிடையேயான போட்டி நிகழ்வுகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
கவிஞரின் வீடு கலைக்கூடமாகவே காணப்படும். இவ்வாறாக கலைப்பணியோடு நின்று விடாது சமூகத்தை நேசிக்கும் நல்மனிதராக அவர் வாழ்ந்தார்.
நல்ல பல சமூகபணிகளை இவ்வூருக்கு செய்து, மக்களோடு மக்களாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் பிரச்சினைகளை தனது பிரச்சினையாக முன்னிலைப்படுத்தி ஊர்போற்ற வாழ்ந்த செட்டியூர் சிந்தனைச் செல்வன் மயில்வாகனம் அவர்களின் 86 ஆவது பிறந்த தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment