மொனராகலை பிரதேசத்தில் இன்று (13) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் மீது சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மொனராகலை உள்ளூராட்சி மன்ற மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்த கட்சி ஆதரவாளர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment