வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஆனால் அதற்கு நான் உடன்பாடில்லை. அது ஒரு விசப் பரீட்சை. நான் வன்னி மக்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளேன். அவர்களது நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடும் என அவர் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment