நூருல் ஹுதா உமர்
கிழக்கின் சுற்றுலா மையம் அமைப்பினுடைய தையல் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு செயற்றிட்டம் IHS தொழிற்பயிற்சி கல்லூரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கிலங்கையில் வசிக்கின்ற தையல் துறையில் ஆர்வமிக்க யுவதிகளை மையமாகக் கொண்டு அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதை பிரதான நோக்கமாக கொண்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்பினையும் சமூக அந்தஸ்தையும் உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் கிழக்கின் சுற்றுலா மையம் செயற்திட்டத்தினூடாக IHS தொழிற்பயிற்சி கல்லூரியின் செயற்படுத்தலின் மூலம் SF Garment குழுமத்தினரின் பூரண அனுசரணையுடன் தொழில் முனைவோருக்கான
நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.
இந் நேர்முக தேர்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான தொழில் வழங்கும் கடிதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்ச்சி திட்டத்தில் அதிதிகளாக ஈஸ்டர்ன் டுவர் ஹப்யினுடைய பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சர்ஜுன், IHS தொழிற்பயிற்சி கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.ஏ.ஏ. அபரி, SF Garment குழுமத்தின் தவிசாளர் மொகமட் சுக்ரி, IHSV கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி எம்.எம். நவாஸ், Techlink தொழில்நுட்ப கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பாத்திமா ரின்ஸா , IHSV கல்லூரியின் பதிவாளர் நஸீமா பானு, SRN சௌமியா உற்பத்திகள் நிறுவனத்தினுடைய தவிசாளர் எஸ். சௌமியா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment