#அகில #இலங்கை #முஸ்லிம் #கலாசாரப் #போட்டி #நிகழ்வு (2024)--
அழைத்துச் சென்ற நான்கு நிகழ்வுகளிலும் #தேசிய #மட்டத்தில் #முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது #அக்கரைப்பற்று #முஸ்லிம் #மத்திய #கல்லூரி !!!!!
நேற்று 07/09/2024 தொடக்கம் இன்று 08/09/2024 வரை கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட முஸ்லிம் கலாசாரப் போட்டி நிகழ்வுகளில் எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையானது
மொத்தமாக அழைத்துச் சென்ற நான்கு நிகழ்ச்சிகளிலும் வெற்றி மகுடம் சூடிக்கொண்டதுடன் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதி கூடுதலான வெற்றிகளை தனதாக்கிய பாடசாலை எனும் பெருமையினையும் பதிவு செய்தது .
.சிரேஷ்ட மாணவர்களுக்கான ஹஸீதா, ரபான் நடனம் ஆகிய இரு குழு நிகழ்வுகளிலும்,அறபு எழுத்தனி, அறபுத் தமிழ் ஆகிய இரு தனி நிகழ்வுகளிலுமே இவ்வாறு முதலிடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நாடெங்கிலும் உள்ள #ஒன்பது #மாகாணங்களிலும் தெரிவான பல்வேறு பாடசாலைகளுடன் கடுமையான போட்டிகளை மேற்கொண்டே இவ்வாறானதொரு #வரலாற்று #வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இப்போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற பல்வேறு வழிகாட்டல்களை வழங்கிய பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,இஸ்லாம் பாட ஆசிரியர்கள் இரவு பகலாக பயிற்றுவித்த ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள் என யாவருக்கும் அதிபர் AH.பௌஸ் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறார்.
தகவல்-
பிரதி அதிபர்
இணைப்பாட விதானம்
Post a Comment
Post a Comment