“எனக்காக நான் எந்த இலக்கும் நிர்ணயிப்பதில்லை. கும்ப்ளே அவருடைய சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொருத்தவரை இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைந்தபின் கிரிக்கெட் மீதான காதலை நான் இழக்க விரும்பவில்லை.
கடினமான காலங்களுக்குப் பின் என் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை நான் அறிவேன். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை இறுகப்பிடித்துள்ளேன். எப்போது அந்த பிடி தளர்கிறதோ அப்போது விலகுவேன்”, என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்தும், கிரிக்கெட் மீதான காதல் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.
சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு 38 வயதாகிறது.
செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்களோடு சேர்ந்து கடந்த சில நாட்களாக அஸ்வின் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஐஸ்கிரீம் உருவான வரலாறு: குளிர் அல்லாத வெப்ப பிரதேசங்களில் ஐஸ்கிரீம் எவ்வாறு தயாரித்தார்கள்?
17 செப்டெம்பர் 2024
சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
17 செப்டெம்பர் 2024
அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னை
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை
அஸ்வின் 1986-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ரவிச்சந்திரன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த அஸ்வின், பிடெக் தகவல்தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
அஸ்வின் தனது 9 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அஸ்வினுக்கு சந்திரசேகர் ராவ், சி.கே.விஜயகுமார் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளனர். சுழற்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும் முன், மித வேகப்பந்து வீச்சாளராகவே அஸ்வின் பயிற்சி எடுத்து வந்தார்.
சிஎஸ்கே முதல் சர்வதேச போட்டிகள் வரை
2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்த பிசிசிஐ (BCCI) தேர்வுக்குழுவினர் இந்திய அணிக்காக விளையாட அஸ்வினை தேர்ந்தெடுத்தனர்.
2010-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கினார். அதன்பின் 2010 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின், உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வானார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரு போட்டிகளில் மட்டுமே விளையாட அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
கோயபல்ஸின் காதல் கூடமாக திகழ்ந்த ஆடம்பர மாளிகை தற்போது எப்படி இருக்கிறது?
17 செப்டெம்பர் 2024
முஸ்லிம், யூதர் பின்பற்றும் சுன்னத் சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?
17 செப்டெம்பர் 2024
அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னைபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அஸ்வின் விளையாடினார்.
டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம்
2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் முதன்முதலாக இந்த வகை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகினார்.
முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை அஸ்வின் வென்றார். மும்பையில் நடந்த இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். 1962-ஆம் ஆண்டிற்கு பின், ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.
அனில் கும்ப்ளே இடத்தை நிரப்பிய அஸ்வின்
இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது. அனில் கும்ப்ளேயின் கிரிக்கெட் பயணம் முடிந்து அடுத்ததாக ஒரு வலுவான பந்துவீச்சாளரை இந்திய அணி தேடியபோது அஸ்வினை கண்டுபிடித்தது.
ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் தவிர சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாத காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் வந்த அஸ்வின், கும்ப்ளே இடத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார்.
அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
கருப்பு நிற நீரை மழையாக பொழிந்த மேகங்கள் - பிரேசிலில் என்ன நடந்தது?
17 செப்டெம்பர் 2024
உணவுப் போட்டியில் அதிக உணவை வேகமாக உண்ணும் போது உடலில் என்ன நடக்கிறது?
16 செப்டெம்பர் 2024
அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னைபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது.
500 விக்கெட்டுகள் சாதனை
அஸ்வின் தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் இவருக்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்
அனில் கும்ப்ளே உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து, தற்போது 363 விக்கெட்டுகளுடன் அடுத்த போட்டியில் களம் காண உள்ளார்.
இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலை உண்மையில் 'புத்தர் சிலை' என்ற தீர்ப்புக்கு பிறகும் இந்து வழிபாடு தொடர்வது ஏன்?
14 செப்டெம்பர் 2024
பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன?
14 செப்டெம்பர் 2024
அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னைபட மூலாதாரம்,Getty Images
இடக்கை பேட்டர்களின் எதிரி
அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் தனது 516 விக்கெட்டுகளில் 256 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் எடுக்கும் சதவீதம் 46.6% ஆக இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் வளர்த்துக் கொண்டு, தகவமைத்துக் கொண்டு நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், பந்தை டாஸ் செய்வது, நக்குல் பால் என வெவ்வேறு முறைகளில் அஸ்வின் பந்து வீசக்கூடியவர்.
இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.
காத்திருக்கும் சாதனைகள்
உள்நாட்டு மண்ணில் கும்ப்ளே 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வருகிறார். அதை முறியடிக்க அஸ்வினுக்கு தற்போது 22 விக்கெட்டுகள்தான் தேவைப்படுகிறது.
இதுவரை வங்கதேசத்குக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி பந்துவீச்சாளராக ஜாகீர்கான் உள்ளார். அவர் எடுத்த 31 விக்கெட்டுகளை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.
அஸ்வின் மீதான விமர்சனம்
இந்திய கிரிக்கெட்டிலும், உள்நாட்டளவிலும் பெரிய தாக்கத்தை அஸ்வின் ஏற்படுத்தியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை என்றபோதிலும், அவர் மீதான சில விமர்சனங்கள் இன்னும் தொடர்கின்றன.
ஜென்டில்மேன் கேம் என்று சொல்லக்கூடிய கிரி்க்கெட்டில், ஐபிஎல் டி20 தொடரில் மன்கட் அவுட் செய்து கிரிக்கெட்டின் தார்மீக தர்மத்தை மீறிவிட்டார் என்ற விமர்சனம் அஸ்வின் மீது வைக்கப்பட்டது. கிரிக்கெட் விதியின் கீழ் மன்கட்அவுட் சரி என்றாலும், தார்மீக அடிப்படையில் எந்த வீரரும் எதிரணி வீரருக்கு எதிராக அந்த அஸ்திரத்தை பயன்படுத்துவது அரிது. ஆனால், அஸ்வின் அதை வலுவாகச் செய்தார்.
அதேபோல உள்நாட்டு மைதானங்களில் மட்டும்தான் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார், சேனா நாடுகள் எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்களில் அஸ்வின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.
வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற பிட்சுகளாக பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும் சேனா(SENA) நாடுகளில் மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அங்கு அவர் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.
அஸ்வின் ஒரே ஆசை என்ன?
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் தனக்கு ஒரே ஒரு சாதனையை மட்டும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அது குறித்து அவர் கூறுகையில் “ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இனிமேல் அது நடக்கப்போவதும் இல்லை” என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
Post a Comment
Post a Comment