வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒரு சகாப்தம் படைத்த சகோதரி ஆயிஷா ஜுனைதீன், மறைவு




 


By.மஹ்தி ஹசன் இப்றாகிம்.

வானொலியிலும், தொலைக்காட்சியிலும் 

ஒரு சகாப்தம் படைத்த சகோதரி ஆயிஷா 

ஜுனைதீன் அவர்களது மறைவு அவரை 

அறிந்த அனைவரையுமே கவலையில் 

ஆழ்த்தியுள்ளது!


மாதம்பையைச் சேர்ந்த பட்டதாரியான இவர் 1973ஆம் ஆண்டளவில் இலங்கை 

வானொலி முஸ்லிம் சேவையில் மாதர் 

மஜ்லிஸ் நிகழ்ச்சிக்குப் பிரதிகள் எழுதி 

வந்ததோடு 1976ல் அந்நிகழ்ச்சியின் 

தயாரிப்பாளராக இணைந்து கொண்டார்!

அது தவிர இன்னும் பல நிகழ்ச்சிகளையும் 

கலந்துரையாடல்களையும் தயாரித்துள்ள 

அவர் பின்னாட்களில் தொலைக்காட்சியிலும் அறிவிப்பாளராக 

மட்டுமன்றிச் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் ரசிகர்களை வசீகரித்தார்!


நான் இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராக 

நியமனமான 1979.05.15  தினத்திலேயே 

ஏற்கனவே தயாரிப்பாளராக இருந்த 

சகோதரி ஆயிஷாவுக்கும் அதே நியமனம் 

கிடைத்தது! 2012ல் கலாசாரத் திணைக்கள 

கலாபூஷண விருதும் அவருக்கு வழங்கப்பட்டது! சிங்களப் புலமை மிகுந்த 

அவர் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் 

ஈடுபட்டுவந்தார்!


அவர் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்போடு ஆற்றிய பணிகள் இன்றும் மூத்த ஒலிப்பாளர்களால் நன்றியோடு நினைவுகூரப்படுகிறது!


அல்லாஹ் அச் சகோதரியின் பாவங்களை 

மன்னித்து மேலான சுவன வாழ்வை அருள்வானாக!