அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி புத்தாக்க மாணவன் AM.#முராத் தேசியப் போட்டிக்கு தெரிவு




 



#மாகாண #மட்ட #தகவல் #தொழிநுட்ப #புத்தாக்க #போட்டி #நிகழ்ச்சி-2024


அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் #தேசிய #மட்டப் #போட்டி நிகழ்வுக்கு தெரிவு !!!!!!


எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் செயற்பட்டு வரும் இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் தொடர்பான குழுக்களாக காணப்படும் #Computer #Society, #Hardware & #Software #Team, #young #Inventors #Club ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால்  இன்று 14/09/2024 மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட தகவல் தொழில்நுட்ப புத்தாக்க  (ICT INNOVATION) போட்டி நிகழ்வில் எமது பாடசாலை சார்பாக சுமார் 10 மாணவர்கள் பங்குபற்றினார்கள்.மேற்படி போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவம் செய்து சுமார் 150 மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.ஆயினும் அக்கரைப்பற்று கல்வி வலயம் சார்பாக எமது பாடசாலை மட்டுமே பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதில் #AM.#முராத் எனும் மாணவன் #கல்வித்துறையில் #புத்தாக்கம் புரிவதற்கான ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்மையால் அவர் தேசிய மட்ட தகவல் தொழில்நுட்ப புத்தாக்க போட்டி நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு அக்கரைப்பற்றில் இளம் விஞ்ஞானி எனும் விருது பெற்ற மிஸ்காத் அவர்களின் மகனாவார்.


மேலும்,ஏனைய மாணவர்கள் 9 பேருடைய கண்டுபிடிப்புக்களும் நடுவர்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுக்கு மாகாண மட்ட #விசேட #திறமைச் #சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன இந்நிகழ்வானது எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்த வரலாற்று நிகழ்வாகும் எனக் கூறின் அது மிகையாகாது.


இதற்காக மாணவர்களை பயிற்றுவிப்பதில் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வசதிகளை ஏற்படுத்தித் தந்த அதிபர் AH.பௌஸ் மற்றும் எமது பாடசாலை ICT பாட ஆசிரியர்கள்,விஞ்ஞானப்பாட ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள் சாதித்து காட்டிய மாணவச் செல்வங்கள் என யாவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தகவல்-

#பிரதி #அதிபர்

#இணைப்பாட #விதானம்