ஜனாதிபதித் தேர்தலில் இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், 50 வீத வாக்கை எவரும் பெறாத காரணத்தினால் விருப்பு வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அடிப்படையில் சஜித் மற்றும் அநுரவை பிரதான வேட்பாளராக கருதி விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும், ஏனையவர்கள் போட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
விருப்பு வாக்குகள் எண்ணப்படுதல் - தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
Post a Comment
Post a Comment