இலங்கைக்கு 17 பில்லியன் டொலர் கடன் நிவாரணம்




 


கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளின் விளைவாக இலங்கைக்கு 17 பில்லியன் டொலர்களை விட அதிக கடன் தொகை நிவாரணமாக கிடைத்துள்ளது.


3.3 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக சீன அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை உடன்பாட்டை எட்டியுள்ளது. 


சீனா எக்ஸிம் வங்கி, சீனா அபிவிருத்தி வங்கி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் பிணைமுறி உரிமையாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளின் விளைவாக, சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 17 பில்லியன் டொலர்களை விட அதிக தொகை கடன் நிவாரணம் கிடைத்துள்ளது.