பொலிஸ் திணைக்களத்தின் 158 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு




 



பாறுக் ஷிஹான்


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158 வது ஆண்டு நிறைவு   அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் செவ்வாய்க்கிழமை(3) இடம்பெறவுள்ளன.

இதனடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆலோசனையில்  மும்முரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வினை  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில்   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலினூடாக  கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் முன்னெடுத்திருந்தார்.

இதன்படி 158 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 இதன் போது  கல்முனை நகர  ஜும்மா பள்ளிவாசலில்  துஆ பிராத்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தொடர்ந்து கல்முனை முருகன் ஆலயத்திலும் சகல பொலிஸாருக்கும் ஆசி வேண்டி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதன் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.