சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றி 15 ஆண்டுகளின் பின் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய வரலாற்று சாதனையை பதிவு செய்தது.
மூன்றாவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் (2023 - 2025) அங்கமாக நடைபெற்ற குறித்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸூக்காக 5 விக்கெட் இழப்புக்கு 602 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் குவித்தனர்.
பதிலுக்கு தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இலங்கையின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 88 ஓட்டங்களுக்குள்
Post a Comment
Post a Comment