மட்டக்களப்பு நீதிமன்ற கட்டளையினால் KFC விற்பனை நிலையம் , தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது








 மட்டக்களப்பில் மூடப்பட்ட KFC விற்பனை நிலையம்!!


சுகாதாரச்சீர்கேட்டை முன்னிட்டு மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் மட்டக்களப்பு KFC விற்பனை நிலையம் இன்று (18) மூடப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் அவர்களின்

ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பிராந்திய சுகாதார பணிமனையின்

பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த KFC நிலையத்திற்கு சென்று திடீர் சோதனையினை மேற்கொண்டுள்ளனர். 


இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் மேல் வழக்கு தொடரப்பட்டு, நீதி மன்றத்தினால் (22) திகதி வரை தற்காலிகமாக 4 நாட்கள் மூடப்பட்டு, மேலதிக நீதி மன்ற ஆணைக்காக தற்காலிகமாக குறித்த நிறுவனம் பூட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறாக செயற்படும் உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.