விசேட தேவையுடையோர் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகம்









 அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விசேட தேவையுடையோர் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகம் இன்று(23) அம்பாரை வீதிலுள்ள தனியார் கட்டடமொன்றில் திறந்து வைக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற அலுவலக திறப்பு விழாவில் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதம அதிதயாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக தனம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் ரகுபதி கலந்து கொண்டார்.
மற்றும் பிரதேச செயலக கிராம நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் இந்துமாமன்ற தலைவர் தணிகாசலம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேச விசேட தேவையுடையோர் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்தின் பெயர்ப்பலகையினை உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் தனம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் ரகுபதி ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.
இதன் பின்னராக அலுவலகத்தினை கிராம நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் விசேட தேவையுடைய மாணவர் ஒருவரால் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் பரணி உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் சென்ற நிலையிலும் இதுவரையில் சங்கத்திற்கான அலுவலகம் இல்லாமல் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.