(வி.ரி.சகாதேவராஜா)
இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயமும் இணைந்து நடாத்திய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.குணராசா தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
காரைதீவில் இடம்பெற்ற துறவற நூற்றாண்டு விழா அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவாகும்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிமனையின் இந்துசமய பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் ம.லக்குணம், பிரதி அதிபர் எஸ்.கோகுலராஜ் திருமதி புண்ணியமலர் , கல்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நா. ஸ்ரீபிரியா, வளவாளர் நா.சனாதனன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .
பாடசாலைகளுக்கான சுவாமியின் படங்களை சமயப்பற்றாளர் மகேந்திரன் வழங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய கலாசார
அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.
Post a Comment
Post a Comment