(எம்.என்.எம்.அப்ராஸ்)
இன மத பேதங்களுக்கு அப்பால் நான் எனது தந்தை பாட்டனார் போல பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் கல்வித் திட்ட,சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு "புதிய யுகம் நோக்கிய பயணம்" எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (24)இடம் பெற்றபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் கல்வித் திட்ட,சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா இவ்வாறு உரையாற்றினார்.
அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்
எனது தந்தை மர்ஹூம் மாயோன் முஸ்தபாவின் திட்டங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மாவட்ட இளையோருக்கான வேலைவாய்ப்பு,அம்பாறை மாவட்டஇளைஞர்களுக்கான நவீன வசிதிகள் கொண்ட தொழினுட்ப கல்லூரி, நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் மேலும் பல இளையோருக்கான தேவைப்பாடுகள் மக்கள் நலன் சார் இதர சேவைகள் என்பன எதிர்வரும் ஜானாதிபதி தேர்தலில் சஜித்பிரேமதாஸ நிச்சயம் வெற்றி பெற்ற பின்னர் அதன் பிறகு அமையவுள்ள அரசாங்கத்தில் முழு அதிகாரம் கொண்ட கேபினட் அமைச்சராக நிச்சயம் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ரிசாத் பதியுதீன் நியமிக்கப்படுவார் அதன் மூலம் தலைவரின் உதவியுடன் மேலும் பல சேவைகளை மேற்கொள்வேன்.
அம்பாரை மாவட்டத்தில் என்னை பல கட்சிக்ள் அழைத்தது ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை கட்டமைப்பு மாவட்ட கொள்கை சரியான பாதையை முன்னெடுக்கும் என்ற வகையில் நான் இந்த கட்சியில் இணைந்து பயணித்து சேவையாற்ற உள்ளேன் என ரிஸ்லி முஸ்தபா மேலும் தெரிவித்தார். கல்முனை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.அகமதின் பேரனும் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது. இவ் இளைஞர் மாநாட்டில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான அமீர் அலி கௌரவ அதிதியாகவும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவருமான அப்துல் ரசாக் ஜவாத்,கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹீர்,கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஐ.எல்.எம். மாஹீர், கட்சியின் பிரதிச்செயலாளர் நாயகம் அன்சில் அல்-அமீரி, முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இளைஞசர்,யுவதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதன் போது பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள்,பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment