(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரசாக் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நேற்றிரவு(31)இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலையின் நிலை தொடர்பில் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் அவர்கள் கருத்து தெரிவித்துடன் மேலும் பாடசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பாக பழைய மாணவர்கள் மத்தியில் ஆராயப்பட்டதன் பின்னர் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்கத் தலைவராக பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக்,உபதலைவராக டீயுட் ஆடையகத்தின் பணிப்பாளர் எஸ்.எம். சப்ராஸ்,
செயலாளராக கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத்,பொருளாலராக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.ஏ.எம்.ரியால் ஆலோசகராக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் உட்பட மேலும் செயற்குழு உறுப்பினர்களாக பழைய மாணவர்கள் பிரிவு ரீதியாக(Batch) ஒவ்வொருவர் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.
Post a Comment
Post a Comment