அக்கரைப்பற்று Water Park Road இல் வைத்து அடையாளம் தெரியாத 4 நபர்களால் தாக்கப்பட்டு, அட்டாளைச்சேனையை சேர்ந்த PTH. அமீர் (றசாக்) நேற்றிரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார்.
ஹெல்மெட்டினால் தாக்குதலுக்கு உயிரிழந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 50 வயது நிரம்ப பெற்றவரின் ஜனாசா பிரேதப் பரிசோதனைக்காக, அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. குறித்த பிநேகத்தை அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பார்வையிட்ட அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி கௌரவ AW. அர்ஜுன் அவர்கள் இந்த கட்டளையை பிறப்பித்தார்.
சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானவர், உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் அக்கரைப்பற்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Post a Comment
Post a Comment