திருக்கோவில் பிரதேசத்தில், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கட்சி அலுவலகம்




 



செய்தியாளர்/ ஜே.கே.யதுர்ஷன்...

திருக்கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கட்சி அலுவலகம் திறந்து வைப்பு.....


முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.திரு.குமாரசாமி புஸ்பகுமார்(இனிய பாரதி)அவர்களின் தலைமையில்....


2024 ஜனாதிபதி பொது தேர்தலில் சுயட்சையாக கேஸ் சிலீண்டர் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை நாட்டின் ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளரும் மான ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கட்சி அலுவலகமானது இன்றையதினம் திருக்கோவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது....


இன் நிகழ்வானது கிழக்கு மகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கௌரவ.திரு.குமாரசாமி புஸ்பகுமார் இனியபாரதி அவர்களின் தலையில் இடம்பெற்றது....


இன் நிகழ்வின் பிரதம அதிதியாக  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ .திரு.தயாக்கமகே அவர்களின் பிரதேக செயலாளர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக இவ் அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டது.....


இன் நிகழ்வில் கல்முனை சேர்ந்த லீங்கேஸவரன் மற்றும் பொதுமக்கள்  இளைஞர் அணியினர் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...


மேலும் இவ் நிகழ்வின் முன்னாள் கிழக்கு மகாண சபையின் உறுப்பினர் புஸ்பகுமார் இனிய பாரதி அவர்கள் தெரிவிக்கையில் 5வருடங்களுக்கு பின்பு இவ் பொது தேர்தல்இடம்பெறுகின்றது இப்பொது தேர்தலில் ஆளுமைமிக்க ஓர் தலைவரை நாம் தேர்தெடுக்க வேண்டும் மேலும் கடந்த ஆண்டு எமது நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முககொடுத்துள்ளது இவ் பொருளாதார பிரச்சினையால் எமது நாட்டு மக்கள் வெயிலிலும் மழையிலும் அன்றாட வாழ்வாதாரத்தினை முன்னெடுக்க பல பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளர் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வரியில் நிற்கும் நிலை ஏற்பட்டது அதனை எல்லம் சரி செய்து எமது நாட்டினை மீண்டு வழமைக்கு திரும்பியது ரணில் விக்கிரம சிங்க அவர்களே அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் அவர் வெற்றி பெற்றால் மாத்திரமே எமது நாடு மற்றும் பிரதேசம் சரியான அபிவிருத்தியை நோக்கிய பாதையில் நகரும்...மேலும் எமது பிரதேசத்தில் நிறைய அடிப்படை தேவைகள் உள்ளது அதில் முக்கிய தேவையான வைத்திய சேவையில் எமது திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் நிறைய குறைகள் காணப்படுகின்றது அதனை மாற்றி வைத்திய சாலையினை தரம் உயர்த்த வேண்டும் அதற்கு நாம் சரியான நாட்டுத்தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டும் என இவ் நிகழ்வின் உரையில் அவர் தெரிவித்தார்....


செய்தியாளர் 

ஜே.கே.யதுர்ஷன்...