பாவலர்மணி திருமதி. சரளா விமல்ராஜ் அவர்களின் நான்கு மரபுக்கவிதை நூற்கள் வெளியீடு




 


(சுகிர்தகுமார் )


 சித்தானைக்குட்டி சுவாமிகளின் ஆசிர்வாதத்தினை பெற்ற அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பனங்காட்டு மண்ணில் பிறந்து 30 வருடகாலமாக சுவிற்சலாந்து நாட்டில் வாழ்ந்துவரும் சமூக சேவையாளரும், தமிழ் கலை இலக்கியவாதியுமான பாவலர்மணி திருமதி. சரளா விமல்ராஜ் அவர்களின் நான்கு மரபுக்கவிதை நூற்கள் எதிர்வரும் 2024.08.31ஆம் திகதி அவரது தாய் மண்ணில் மிகவும் பிரமாண்ட முறையில் வெளியீடு செய்து வைக்கப்படுகின்றது.
இந்நூல்களின் வெளியீடானது அக்கரைப்பற்று 'சுவாமி விபுலாந்தா சிறுவர் இல்லம்' மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் மற்றும் பிரான்ஸ் கம்பன் கழகம் இணைந்து இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொள்வதுடன் அருளாளர்களாக மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் தலைவர் ஸ்ரீமத் நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மற்றும் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ புண்ணிய கிருஸ்ண குமாரக்குருக்கள் ஆகியோரும் விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் கல்வி அதிகாரிகள் கவிஞர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.


பாராட்டுகளைப் பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்.

அத்தோடு வெளிநாடுகளில் வழங்கப்படும் பல விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரர் என்பது நம் நாட்டிற்கும் பிறந்த மண்ணிற்கும் புகழை தேடி தருகின்றது.
கலை இலக்கிய ஆர்வலர் மட்டுமல்லாது தனது சொந்த செலவில் பல சமூகசேவைகளையும் செய்துவரும் இவர்'உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப்பேரவை'யின் சுவிற்சலாந் நாட்டுக் கிளையின் தலைவருமாக செயலாற்றி வருகின்றார்.
புலம்பெயர்ந்து சுவிஸ்நாட்டில் கணவருடன் வாழ்ந்து அந்த நாட்டிலேயே கணவரை இழந்து பெண்ணொருவராக தனித்து நின்று தன் பிள்ளைகளுக்கு கல்வி ஊட்டி சமூகத்தில் நற்பிரஜைகளாக வளர்த்தெடுத்ததோடு நின்று விடாமல்  அதன் பின்னராக பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து தளராத முயற்சி சிறப்பான சிந்தனையுடன் கலை இலக்கியத்தில் நுழைந்து இப்படிப்பட்ட சமய சமூக பணிகளையும் துணிந்து முன்னெடுப்பது பாராட்டப்பட வேண்டியதே!
எனவே அவரின் மேற்படி செயற்பாடுகளை கௌரவித்து நிகழ்வில் பங்கு கொண்டு அவரை வாழ்த்துவோம், சிறப்பிப்போம்.
'அனைவரும் வருக'