வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு நிருபர்
இயற்கை நிறைந்த வயல்வெளி கொண்ட இத்தியடி பிள்ளையார் அருகில் குடிகொண்ட பேச்சியம்மனின் திருச்சடங்கு வளைகாப்பு பூஜைகளுடன் கடந்த 07ஆம் திகதி ஆரம்பமானது.
தொடர்ந்து திருச்சடங்கானது 08ஆம் திகதி 09ஆம் திகதி இடம்பெற்ற அம்மனி;ன் விசேட பூஜைகளுடனும் 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்வீதி மற்றும் வெளிவீதி கிராம சுற்றுலாவுடனும் 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற கன்னிமார் அழைத்து வரும் விசேட பூஜைகளுடனும் நேற்று அதிகாலை இடம்பெற்ற திருக்குளிர்த்தி பள்ளயத்துடனும் நிறைவுற்றது.
நேற்றிரவு பேச்சியம்மனின் விசேட பூஜைகள் இடம்பெற்று 7 கன்னிமார்களை அழைத்துவரும் வழிபாடுகள் ஆரம்பமானது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வேண்டியவர்களாக கன்னிமார்களை அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அம்மன் ஆலயத்தில் பூஜைகள் ஆரம்பமானதுடன் அம்மன் காவியங்களும் பாடப்பட்டது.
இதேநேரம் இன்று அதிகாலை பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் பள்ளயத்துடன் திருச்சடங்கு நிறைவுற்றது.
இத்தியடி பிள்ளையார் ஆலய நிருவாக சபையின் மேற்பார்வையில் இடம்பெற்ற வேப்பிலை பேச்சியம்மன் ஆலய திருச்சடங்கு வழிபாடுகளை பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதமகுருவும் இத்தியடி பிள்ளையார் மற்றும் வேப்பிலை பேச்சியம்மன் ஆலய பிரதமகுருவுமான சிவத்திரு கு.ரவீந்திரநாதன் தலைமையிலான சிவத்திரு நிசாந்த் உள்ளிட்ட குருமார்கள் நடாத்தி வைத்தனர்.
Post a Comment
Post a Comment