சுகாதார நலன்கள் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுப்பு !
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 06, 07 மற்றும் 10 பிரிவுகளின் உள்ள மாணவிகளுக்கு சுகாதார நலன்கள் தொடர்பான பரிசோதனைகளை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறூக் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், இந்த கல்லூரியின் பழைய மாணவியும் பிரபல மனநல மருத்துவரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான எஸ்.எப். டாக்டர் ஸஹ்ரா சரப்தீன், டாக்டர். ஏ. ஆர். எம் அஸ்மி, கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ், பிரதி அதிபர் என்.டி நதீகா, பகுதித் தலைவிகள், தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment