மாணவர் சந்தை!







 ( வி.ரி.சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் மாணவர் சந்தை அதிபர் பொன். பாரதிதாசன் முன்னிலையில் சிறப்பாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

 மாணவர்களின் சந்தை அறிவு அனுபவம் அங்கே பெற்றோர்களின் உதவியுடன் நிறைய வெளிப்பட்டது .

மாணவர் சந்தையைப் பார்வையிட வந்த 
பலர் அங்கு மாணவர்கள் காட்சிப்படுத்திய சந்தைப்பொருட்களை மனமுவந்து கொள்வனவு செய்தார்கள் .ஒரு சில மணி நேரத்தில் மாணவர் சந்தை நிறைவுக்கு வந்தது.
 அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு விட்டது .
பெற்றோர்களின் பங்களிப்பு பூரணமாக இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.