பனங்காடு பொதுமயானத் துப்பரவு பணிகள்





 வி.சுகிர்தகுமார்  



பனங்காடு பொதுமயானத் துப்பரவு பணிகள் இன்று(10) சிரமதானம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
பனங்காடு அனைத்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இச்சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதில் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஊழியர்களும் இணைந்து கொண்டனர்.
பனங்காடு பொதுமயானம் ஆனது பற்றைக்காடுகள் நிறைந்து காணப்பட்டதுடன் பொறுப்பற்ற சில பொதுமக்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டெங்கு நுளம்பு பரவக்கூடிய பொருட்களும் காணப்பட்டன.
இதனை கருத்தில் கொண்ட பனங்காடு பொது அமைப்புக்களின் ஒன்றியமானது அனைத்து அமைப்புக்களுக்கும் அறிவித்தல் கொடுத்து துப்பரவு பணியை மேற்கொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை உழவு இயந்திரங்களி;ன் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.
இதேநேரம் தேவையற்ற பொருட்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இந்நிலையில் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை பொதுமாயனத்தில் வீசுகி;ன்றவர்கள் சமூகப் பொறுப்புடையவர்களாக தங்களது நடவடிக்கையினை கைவிடுமாறும் அவ்வாறு வீசுகின்றவர்கள் அடையாளம் காணப்படுமிடத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைப்புக்களால் கோரிக்கை விடப்பட்டது.