இலங்கை தொலைக்காட்சியில் ,முதலாவது பெண் செயதி அறிவிப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய மறைவு




 



ITN,Rupavahini,SLBC ஆகிய ஒலிபரப்பு நிலையங்களில் பணிபுரிந்த  சுமனா நெல்லம்பிட்டிய காலமானார்.

இலங்கையின் முதல் பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காலமானார்.

------------------------

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார்.


இறக்கும் போது அவருக்கு வயது 80 .

 நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாக சுமனா நெல்லம்பிட்டிய கடமையாற்றியிருந்தார்.


சுமனா நெல்லம்பிட்டிய 1962ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்துகொண்டார்.


இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய ஆவார்.


அந்த நேரத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.