செய்தியாளர்/ ஜே.கே.யதுர்ஷன்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் எதிர்பார்ப்புடன் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான மாவட்ட தொழில் சந்தை நிகழ்வு இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலத்தில் இடம்பெற்றது.....
இவ் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது...
மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் வழிகாட்டலில் அம்பாரை மாவட்ட செயலகமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தொழிலை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான மாவட்ட தொழில் சந்தை நிகழ்வானது 2024.08.29 இன்றைய தினம் மு.ப. 9.00 மணி தொடக்கம் பி.ப. 1.00 மணிவரை திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது...
இத் தொழிற் சந்தை நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச மற்றும் அரசாராபற்ற தொழில் வழங்கல் நிறுவங்களின் மற்றும் வங்கிகளின் முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்....
மேலும் இவ் தொழில் சந்தையில்
1. தொழில் தேடுனர்களை (PES) இணையத்தில் பதிவு செய்தல்.
2. உள்நாட்டு,வெளிநாட்டு ரீதியாக கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ள தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் தங்களது பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக
நேர்முகப் பரீட்சை நடாத்துதல்
தொழிலை ஏதிர்பார்த்திருப்போரை அவ் வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்ளல்
தொழில் வழிகாட்டல் சேவைகளை வழங்குதல்
தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிக் கற்கை நெறிகள் தொடர்பாக அறிவூட்டுதல் மற்றும் பயிற்சி நெறிகளுக்காக ஈடுபடுத்துதல் உள்ளடங்கிய சேவைகள்.
3. சுயதொழில் விருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்கான வழிகாட்டல்கள்
4. தொழில் திறவுகோல் (Career key) ஊடாக எதிர்கால தொழில் மற்றும் கல்வி கனவுகளுக்கான வழிகாட்டல்கள் போன்ற பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட்டன....
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயக உதவிப்பிரதேச செயலளர் திரு.நிருபா மற்றும் பிரதேச செயல நிருவாக பிரிவின் முகாமையாளர் மற்றும் சமுத்தி தலைமீட முகாமையாளர் கிராம சேவர்களுக்கான நிறுவாக உத்தித்தியோத்தர் , திருக்கோவில் பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோத்தர்கள் இளைஞர் யூவதிகள் என பலரூம் இவ் தொழில் சந்தை நிகழ்வில் கலந்து கொண்டனர்....
செய்தியாளர்
ஜே.கே.யதுர்ஷன்....
Post a Comment
Post a Comment