ஆகில் மிகா,தேசிய மட்டத்திற்கு தெரிவு...!




 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


 இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் ரிட்ச்பரி(Ritzbury) நிறுவனத்தின் அனுசரனையில் நாடு பூராக நடைபெறும் 53 வது Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நேற்று (03) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் எம்.எம்.எம். ஆகில் மிகா 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான 80m தடைதாண்டல் ஓட்டத்தில் முதலாம் இடத்தையும் 100m ஓட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் 12 வயது ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் மாணவன் ஏ.எம்.லயிஸ் 3.92m தூரம் பாய்ந்து அதி சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார். 

இம்மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்து அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களையும் "பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக்,உட்பட ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் பாடசாலை சமூகம் பார்ட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.