திருக்கோவிலில் மாவட்ட தமிழ் மொழித்தின போட்டி !





 ( வி.ரி.சகாதேவராஜா)


அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிக்கான கல்முனைக்கல்வி மாவட்ட நிலைப்பன போட்டி நாளை(15) வியாழக்கிழமை  திருக்கோவில் வலயத்திலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது .


திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துள்ளா ஆகியோர் கலந்து கொள்வார்கள் .

காலை 8 மணிக்கு தமிழ் மொழி தின பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற இருக்கின்றது .அதன் பிறகு ஏனைய நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெறும்.