கராத்தே சுற்றுப் போட்டிகள்




 


வி.சுகிர்தகுமார்   


ஆலையடிவேம்பு நிருபர்

ராம் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த மாமனிதர் சிஹான் கே.இராமசந்திரன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டிகள் அக்கரைப்பற்று அல் சிறாஜ் பாடசாலை மண்டபத்தில் நேற்று(25) முழுவதுமாக இடம்பெற்றது.
ராம் கராத்தே சங்கத்தின் ஆலோசகரும் கிழக்கு மாகாண ராம்கராத்தே சங்கத்தின் தலைவருமான சிஹான் கே.சந்திரலிங்கம் தலைமையில்;  ; ராம்கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தி ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டிகளில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் எச்.எம்.சிசரகுமார மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதியராஜ் சட்டத்தரணியும் வைத்தியருமான சமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியில் பல பாடசாலைகளை சேர்;ந்த 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் சட்டத்தரணிகள் வைத்தியர்கள் பொலிஸ் அதிகாரிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி நிகழ்வில் விசேட அம்சமாக இவ்வருடம் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் பங்குபற்றி தேசிய மட்ட போட்டி நிகழ்வுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 13 மாணவ மாணவிகள் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகளால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதிகளும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஆரம்ப பிரிவு மாணவர்கள் தொடக்கம் கறுப்பு பட்டி வீரர்கள் வரையானவர்களுக்கான செய்முறை பரீட்சை இடம்பெற்றதுடன் கறுப்பு பட்டியின் விசேட தரத்திற்கு உயர்த்தப்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சையும் இடம்பெற்றது.
இதன் பின்னராக தரப்படுத்தல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கறுப்பு பட்டியின் விசேட தரத்திற்கு உயர்வு பெற்ற வீரர்களுக்கான பட்டியும் சான்றிதழும் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பிரதம அதிதிகள் தேசிய மட்ட சாதனை மட்டுமல்லாது சர்வதேச போட்டிகளிலும் தொடரான சாதனை படைத்து வரும் ராம்கராத்தே சங்க மாணவர்களை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.