( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சங்கமன் கிராமத்தில் பனம் பொருள் கைப்பணி உற்பத்திகள் மூலமாக வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக இடம் பெற்ற பயிற்சி நெறியை பூர்த்தி செய்த வர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் ஏற்பாட்டிற்கமைய புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் சிவனருள் பவுன்டேசன் அமைப்பின் நிதிப்பங்களிப்பில்
கடந்த 2024.06.05 திகதி சங்கமன் கிராமத்தில் 40 பயனாளர்களுடன் வாழ்வாதார பயிற்சிநெறியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்பயிற்சிநெறியில் பயிற்சி பெற்ற யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அவர்களின் பனம் பொருள் உற்பத்திகளுக்கான விற்பனை கண்காட்சி நிகழ்வும் நேற்று முன்தினம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சிநெறியில் பயிற்சி பெற்ற யுவதிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததோடு பனம் பொருள் உற்பத்திகளுக்கான விற்பனை கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் .
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா கணக்காளர் ஏஎல்எம்.றிபாஸ் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.அனோஜா உஷாந்த் நிர்வாக உத்தியோகத்தர் டி.மங்களா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் என்.கந்தசாமி சமுர்த்தி பிரிவில் தலைமைபீட முகாமையாளர்எம்.அரசரெத்தினம் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆர்..புண்ணியசீலன் சிவனருள் பவுன்டேசன் அமைப்பின் தலைவர் .உதயன் பத்மநாதன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment
Post a Comment