ஜொலிபோய்ஸ்,சம்பியனானது





 ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் 


 அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தின் 41ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
 வருடம் தோறும் நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி (25) அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
 மட்டு அம்பாரை மாவட்ட 64 கழகங்களை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட தொடரில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் மற்றும் அக்கரைப்பற்று டீன் ஸ்டார் ஆகிய கழகங்கள் பலப்பரீட்சை நடத்தின
நாணைய சுழற்சியிலே வெற்றி பெற்ற ஜொலிபோய்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்தெடுக்க நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் முடிவில் டீன் ஸ்டார் அணியினர் 56 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலிபோய்ஸ் அணியினர் ஆரம்பத்திலே தடுமாறினாலும் சாந்தன் மற்றும் துலாஞ்சன் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 6.4 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தனர்

சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஜொலிபோய்ஸ் அணிக்கு  ஒரு லட்சம் ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பெற்ற டீன் ஸ்டார் அணிக்கு மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன் மூன்றாமிடம் பெற்ற அட்டாளைச்சேனை பைனா அணிக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.
தொடர் ஆட்டநாயகனாக ஜொலிபோய்ஸ் அணியின் தினேஸ் மற்றும்  இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் ஜொலிபோய்ஸ் அணியின் சாந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்திற்காக ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல பதவிகளில் வகித்து சேவை புரிந்த கண்ணன் அவ ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக்கொண்டார்.
தலைவரும் கணக்காளருமான புனிதராஜ் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி நிகழ்வுகளில் அதிதிகளாக ஜொலிபோய்ஸ் அணியின் முன்னைநாள் வீரர்கள் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.