(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 30 ஆயிரத்துக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் பேராதனைப் பூங்கா, நுவரெலியா, பாசிக்குடா ,உல்லை போன்ற இடங்களுக்கு பெருமளவில் சென்று பொழுதைக்கொண்டாடி உல்லாசமாக கழித்து வருகிறார்கள் .
குறிப்பாக நேற்று பேராதனைப் பூங்காவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் சரளமாக இணைந்து குதூகலமாக பொழுதைக் கழித்து வந்தார்கள். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 91/ 92 புலன அணியினரும் பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஜேர்மன் சுற்றுலா பயணிகளுடன் இணைந்து அன்பைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த வருடத்தில் இதுவரை பன்னிரண்டு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment