பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்




 


(வி.ரி.சகாதேவராஜா)


ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவை ஆதரித்து  மட்டக்களப்பு மாவட்டத்தில்  நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் ஐக்கிய மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கணேசமூர்த்தி  தலைமையில்  கல்லடியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னாள் அமைச்சர் தவிசாளர்அமீரலி மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இணைந்த கட்சிகளின் உடன்படிக்கை அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உடன்படிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டது.