"ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மதகுருமார் சொல்லும் நல்ல கருத்துகளை வெளிக்கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட வேண்டும்"




 



(வி.சுகிர்தகுமார்)


 தர்மத்தின் தொண்டு எல்லா தர்மத்தையும் வெல்லும் எனும் தொனிப்பொருளில் தமிழ் மொழிமூலமான தர்ம போதனை இன்று(15) ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
மதங்களை கடந்து ஒரு உயர்ந்த மனிதனாக வாழ்வது எவ்வாறு எனும் கருப்பொருளில் இடம்பெற்ற தர்ம போதனை நிகழ்வில் பலாங்கொடை மண்டவாலை சுதர்மராம விகாராதிபதியும் மனித உரிமை ஆணைக்குழுவின் சப்ரகமுவ மாகாண பணிப்பாளருமான பூஜ்ய பகவந்தலாவே ராகுல தேரர் கலந்து கொண்டு சமயம் கடந்த மனிதம் எனும் போதனையினை வழங்கினார்.
ஆசி உரையினை அக்கரைப்பற்று விஜயராம விகாராதிபதி தேவகொட சோரத்த தேரர் வழங்கினார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வணக்கத்துக்குரிய தேரர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




முயற்சிப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

போதனையின் நிறைவே hhகுல தேரர் அவர்களினால் எழுதப்பட்ட நல்வாழ்க்கைக்கான நன்னெறிகள் மற்றும் தர்ம போதனைகள் அடங்கிய தமிழ் மொழி மூலமான நூல்களும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நிறைவாக பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்ததுடன் உத்தியோகத்தர்கள் சார்பிலும் ராகுல தேரருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.