அச்சுறுத்தியதாக மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு




 



( வி.ரி.சகாதேவராஜா)


சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி திருமலையில் இன்று (30)  வெள்ளிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பு ஒரு போராட்டத்தை திருமலை கடற்கரையில் மேற்கொண்டனர்.

கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்களிலும் ஏனைய மார்க்கங்களிலும் வந்து சேர்ந்து திருமலை கடற்கரையில் ஒன்று கூடி மூன்று மாவட்ட தலைவிகளின் தலைமையில் போராட்டத்தை நடத்தினர்.




அதனைத் தடுக்க போலீசார் பலத்த முயற்சி எடுத்தனர்.
அப்பொழுது அங்கே வாய்ப் போராட்டம் இடம்பெற்றது . அதன்போது ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக திருமலை கடற்கரையில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
 அதன்பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 இருந்த பொழுதிலும் போலீசாரி தலையீடு கூடுதலாக இருந்த காரணத்தினால் சில ஆண்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.


காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் காரைதீவு சமூக செயற்பாட்டாளர் வினாயகம் விமல நாதன் ஆகியோர் நேரடியாக திருமலையிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தமக்கு பொலிசார் அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு செய்திருக்கின்றார்கள்.

இறுதியாக அவர்கள் திருமலை குரு முதல்வர் அருட்பணி றொபின்சனிடம்  மகஜரை சமர்ப்பித்தனர்.