இந்தியாவின் பலத்தையே பலவீனமாக்கிய இலங்கையின் வியூகம் - 27 ஆண்டு வரலாறு காலி




 


இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச அரங்கில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்துள்ளது. கொழும்பு பிரமதேசா அரங்கில் இன்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை இலங்கை அணி பெற்றது.


முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களில் சுருண்டு 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.


இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்கு எதிராக வென்றுள்ளது. கடைசியாக 2005ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணியிடம் இலங்கை அணி ஒருநாள் தொடரை பறிகொடுத்து வந்தநிலையில் அதற்கு 2024ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.



டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சிறப்பான தொடக்கம் கண்டது. டாப் ஆர்டர் பேட்டர்கள் நிசாங்கா(45), பெர்னான்டோ(96), குஷால் மென்டிஸ்(59) ஆகியோரே கணிசமாக ரன் குவித்தனர். மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.


171 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. 171 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அணி 199 ரன்கள் சேர்த்தபோது 6வது விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இலங்கை அணி ஸ்கோர் ஒரு கட்டத்தில் 180 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 250 ரன்களுக்குள் மட்டுமே சேர்த்தது.


இலங்கை அணி இந்த ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் பெர்னான்டோ 96 ரன்கள் சேர்த்ததுதான் முக்கியக் காரணம். இது தவிர 49வது ஓவர் வரை களத்தில் இருந்த குஷால் மென்டிஸ் 59 ரன்கள் சேர்த்ததும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருந்தது.


வினேஷ் போகாட் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? புதிய தகவல்கள்

7 ஆகஸ்ட் 2024

இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?

7 ஆகஸ்ட் 2024

இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் மோசமான பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் சிறப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்திய அணி கையைச் சுட்டுக்கொண்டது. டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே ஃபார்மில் இல்லாமல் இருந்த சிராஜை ஒருநாள் தொடரில் திணறவே செய்தார். இந்த ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசிய சிராஜ் 78 ரன்களை வாரி வழங்கினார். இதில் 3 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை அடிக்கவிட்டு ஓவருக்கு 9 ரன்களை வாரிக் கொடுத்தார்.


இலங்கை அணியிலும் பெர்னான்டோ எனும் வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து அந்த அணி களமிறங்கியது. அவர் ஓரளவு கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். இலங்கை அணி சேர்த்த ஸ்கோரில் சிராஜ் மட்டும் 33 சதவீத ரன்களை வாரிக் கொடுத்துள்ளார். இதில் பெர்னான்டோ மட்டும் 38 ரன்களை சிராஜ் ஓவரில் விளாசினார்.


மற்ற வகையில் சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஓவருக்கு 3 ரன்ரேட்வீதம் வழங்கினர். முதல் போட்டியில் அறிமுகமாகிய ரியான் பராக் 9 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அக்ஸர் படேலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே வழங்கினார்.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிவு

சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா (35), விராட் கோலி (20), ரியான் பராக்(15), வாஷிங்டன் சுந்தர்(30) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். இதில் கடைசி நேரத்தில் வாஷிங்டன் இன்னிங்ஸ் மட்டும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சற்று அழுத்தத்தை கொடுத்தது, அவரை ஆட்டமிழக்கச் செய்ய மட்டுமே சிறிது சிரமப்பட்டனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய பேட்டர்கள் 9 பேரும் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகினர்.


சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ளனர். அதிலும் சுப்மான் கில் டி20 தொடரிலும் சிறப்பாக ஆடவில்லை, ஒருநாள் தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பினார். நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்வதேச போட்டியில் அறிமுகமான ரியான் பராக்(15) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.


வங்கதேசத்தை வழிநடத்தப் போகும் இந்த 'ஏழைகளின் வங்கியாளர்' யார்?

7 ஆகஸ்ட் 2024

வீராங்கனைகளுக்கு சவால் தரும் மற்றொரு பரிசோதனை - பதக்கம் இழந்த தமிழக வீராங்கனை கூறுவது என்ன?

7 ஆகஸ்ட் 2024

இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

நட்சத்திர பேட்டர் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சுழற்பந்துவீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் போட்டியிலிருந்து மோசமாக விளையாடி பைனலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இந்த ஒருநாள் தொடர் முழுவதும் கோலியின் இயல்பான பேட்டிங் வெளிப்படவில்லை.


இந்திய அணி 52 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. ஆனால், அடுத்த 49 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர்.


அதிலும் வெலாகலே வீசிய 13வது ஓவரில் மட்டும் ஸ்ரேயாஸ், அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால் அணி தோல்வியை நோக்கி பயணித்தது.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியை சிதைத்த பெருமை இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே, வேன்டர்சே, தீக்சனா ஆகியோரையே சாரும். இதில் வெலாகலே மட்டும் 5.1 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீக்சனா, வேன்டர்சே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.


இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட் செய்தார். இரு அரைசதங்களை முதல் இரு போட்டிகளில் பதிவு செய்த ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 35 ரன்கள் சேர்த்து தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். ஆனால், இந்தத் தொடர் முழுவதும் ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைத்து சுப்மான் கில், விராட்கோலி, உள்ளிட்ட எந்த பேட்டரும் ஆடவில்லை,


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் பலத்தையே பலவீனமாக்கிய இலங்கை

இந்திய பேட்டர்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சில் ரன் குவிக்கக் கூடியவர்கள். சர்வதேச அளவில் சாதித்த சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச திணறவே செய்துள்ளனர். ஆனால், அந்த பலத்தையே இலங்கை அணி இன்று இந்தியாவின் பலவீனமாக மாற்றியுள்ளது.


இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்டர்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளனர். மூன்று ஆட்டங்களிலும் தலா 9 விக்கெட் வீதம் மொத்தம் 27 விக்கெட்டுகளை இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். ரோஹித், கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு இரையாயினர்.


இரண்டாவது ஆட்டத்தில், வேன்டர்சே பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் பறிகொடுத்தனர், இந்த ஆட்டத்தில் வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர்.


1997ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி இருந்தது. அந்த சமயத்தில் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே பிறக்கவே இல்லை. ஆனால், இப்போது அவரின் தரமான சுழற்பந்துவீச்சால் 27 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி வென்றுள்ளது.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

"தோல்வியால் உலகம் முடிந்துவிடவில்லை"

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற முதல் தொடர் இதுவாகும். இதில் டி20 தொடரை வென்றபோதிலும் ஒருநாள் தொடரை மோசமாக இந்திய அணி இழந்துள்ளது.


டி20 உலகக் கோப்பையை வென்றபின் ஒருவிதமான திருப்தி உணர்வு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா? அதனால்தான் இந்த தோல்வியா? என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளிக்கையில் “ அப்படி எல்லாம் இல்லை. இப்படி கேட்பதே சிரிப்பாக இருக்கிறது. இந்திய அணிக்காக ஆடும் போது திருப்திஉணர்வு என்பதே இல்லை. யார் சிறப்பாக ஆடினார்களோ அவர்களுக்குதான் வெற்றி. அந்த வகையில் எங்களைவிட இலங்கை அணி சிறப்பாக பேட் செய்தனர், பந்துவீசினர். ஆடுகளம்,சூழலுக்கு ஏற்றாற்போல் நாங்களும் பல வீரர்களைப் பயன்படுத்தினோம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை.


எப்படி பார்த்தாலும் இந்தத் தொடரில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை, அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன். இந்தத் தொடரில் சில நல்ல அம்சங்களும் உள்ளன. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், பந்துவீசுகிறார்கள் என்பதை அறியமுடிந்தது. இதைவிடுத்து, பல்வேறு குறைபாடுகளையும் நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.


இதுபோன்ற சூழலில் நாங்கள் எதிர்காலத்தில் விளையாடும் போது என்ன செய்ய வேண்டும், எப்படித் தயாராக வேண்டும் என்பதையும் ஆலோசிப்போம். தொடரை இழந்துவிட்டால் உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. எங்கள் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடி வருகிறார்கள். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்


வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் - என்ன காரணம்?


ஜெயசூர்யா அன்றும், இன்றும்

கடைசியாக கடந்த 1997 ஜூலை மாதம் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை வென்றிருந்து. அதன்பின் இப்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி தங்களின் தாகத்தை தீர்த்துக்கொண்டது.


1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதில் முதல் ஆட்டத்தில் 2 ரன்களில் வெற்றியை இந்திய அணி கோட்டைவிட்டது. 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை இலங்கை அணி தோற்கடித்தது.


3வது ஒருநாள் ஆட்டம் மழையால் நடக்காமல் போகவே மறுநாள் நடந்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி 9 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த 3 போட்டிகளிலும் பேட்டிங்கில் 210 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜெயசூர்யா தொடர் நாயகன் விருது வென்று இலங்கை அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இலங்கை அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜெயசூர்யா கால் நூற்றாண்டுக்குப்பின் ஒருநாள் தொடரை பெற்றுக்கொடுத்துள்ளார்.