"10 வருடங்களில் அம்பாரை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என சரித்திரத்தில் மாத்திரம் சொல்லப்படும் நிலை'




 


வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்பு நிருபர்
ஒற்றுமையாக செயற்படவில்லையெனில் இன்னும் 10 வருடங்களில் அம்பாரை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என சரித்திரத்தில் மாத்திரம் சொல்லப்படும் நிலை உருவாகலாம் என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அவ்வாறு சரித்திரத்தை உருவாக்கப்போகின்றீர்களா அல்லது மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றீர்களா என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பி;ட்டார்.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் ஒன்று கூடல் ம்ணடபத்தில் கிழக்கு மாகாண வீடமைப்பு பணி;ப்பாளர் சபை உறுப்பினர் பியசேன கிருத்திகனின் அழைப்பின் பேரில் நேற்று(10) மாலை வருகை தந்த அவர் அங்கு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற பொது அமைப்புக்கள் மற்றும் பாடசாலை நிருவாகம்; ஆலய பிரதிநிதிகள் உள்ளி;ட்ட சமூக மட்ட அமைப்புக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பாராளுமன்றத்தில் உள்ள 225 கத்pரைகளில் ஒரு கதிரையில் அமர்ந்திருப்பதற்காக மாத்திரம் நாம் வாக்களித்து ஒருவரை அங்கு அனுப்புவதில்லை. நமது குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பதற்காகவே அனுப்புகின்றோம். இதிலே அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் 85 ஆயிரம் வாக்குகளை வைத்துக்கொண்டு ஒருவரை கூட தெரிவு செய்யவில்லை என்பது வியப்பளிக்கின்றது. இவ்வாறு தவறை இங்கிருக்கும் தமிழ் மக்கள் செய்து விட்டு மற்றவர்களில் குறை சொல்வதில் பலனில்லை.
ஆளுனர் எனும் அடிப்படையில் என்னால் முடிந்த உதவியினை செய்வேன். ஆனால் அது நிரந்தர தீர்வாகாது. உங்களுக்கான ஒரு பிரதிநிதியை தெரிவு செய்வதன் மூலமே நிரந்திர தீர்வை பெற முடியும் என்றார்.
ஆகவே அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு பொதுவான சின்னத்தின் கீழேனும் தேர்தலில் போட்டியிட அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து சொல்லவேண்டியது இங்கிருக்கும் பொது அமைப்புக்களின் கடமை. அவ்வாறு செய்யவில்லையெனில் உங்கள சிறிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காண முடியாமல் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை உருவாகும் என சுட்டிக்காட்டினார்.
 இவ்வாறு நான் சொல்வதால் இங்கிருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு கோபம் வரலாம். ஆனாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கின்றது. ஏனெனில் இது யாழ் மாவட்டம் அல்லது மட்டக்களப்பு மாவட்டம் போன்ற நிலையில் இல்லை. அங்கு ஒருவர் இல்லாவிட்டால் இன்னுமொருவர் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அம்பாரையில் அவ்வாறு இல்லை. வாக்குகள் சிறிதளவேனும் பிரிந்தால் ஒன்றுமில்லாமல் போகும் நிலை எற்படும் என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ளுங்கள் என்றார்.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலுக்கு வருகை ஆளுனருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல கல்வி அதிகாரிகள் ஆலய தலைவர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் என பல அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை ஆளுனர் முன்னிலையில் சமர்ப்பித்தனர். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உடன் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் குறிப்பிட்டார்
இறுதியாக ஆளுனர் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.