மூதூரின் முதலாவது பெண் SLAS
றஸீம் பாத்திமா றொஷானா
( SEUGA வின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!
****************************************
மூதூர் ஆயைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது ஆலிம் நகரை வசிப்பிடமாகவும் கொண்டவர் றசீம் பாத்திமா றொஷானா.
தனது ஆரம்பக் கல்வியை தி/மூ/அறபா நகர் வித்தியாலயத்திலும் தி/மூ/அல் - ஹிதாயா ம.வி, தி/மூ/மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலைக் கல்வியையும், தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவிலும் கல்வி கற்ற இவர் பொது நிர்வாகத்தில் இளமானி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்ட அதிபர் சேவையைச் சேர்ந்த கே.றசீம் மற்றும் மாஹிலா தம்பதிகளின் மூத்த மகளான இவர் தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் முகம்மது சப்றி முகம்மது சியா என்பவரின் மனைவியும் ஆவார்.
மூதூர் பிரதேச சபை, மூதூர் வலயக் கல்வி அலுவலகம், சேருவில பிரதேச சபை ஆகியவற்றில் 10 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்த இவர் தற்பொழுது மூதூர் பிரதேச சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.
றஸீம் பாத்திமா றொஷானா அவர்கள் அண்மையில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இவர் மூதூரிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் SLAS உத்தியோகத்தராக அமைந்து சாதனை படைத்துள்ளார்.
இவருடைய வெற்றிகரமான சாதனையே மூதூர் மண்ணில் #South_Eastern_University_Graduate_Association( #Seuga#)அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய ரீதியாக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்குகள் மூலம் SEUGA அடைந்த மிகப்பெரிய வெற்றியாகும்.
சிறந்த குடும்ப பின்னணியையும், கல்விப்பின்னணியும் கொண்ட இவர் சிறந்த மார்க்கப்பற்றும் சமூகப்பற்றும் கொண்டவராக இருப்பதால் சிறந்த நிருவாக உத்தியோகத்தராக செயற்பட்டு மூதூர் மண்ணுக்கு பல வகையிலும் பங்களிப்பார் என்பதை SEUGA திடமாக நம்புகின்றது.
#றஸீம்_பாத்திமா_றொஷானா அவர்கள் இலங்கை நிருவாகத் துறையில் பல உயர் பதவிகளைப் பெற்று சிறந்த நிருவாக உத்தியோகத்தராக மிளிர்வதற்கு SEUGA அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொள்கின்றோம்.
#SEUGA_Media_Unit
#South_Eastern_University_Graduate_Association_Mutur#
Post a Comment
Post a Comment