மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால், பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர்(C.I) விடுவிப்பு




 


மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் பிரதான  பொலிஸ் பரிசோதகர் என் டி அபூபக்கர் விடுவிப்புச்  செய்யப்பட்டார்.


 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும்  மஹேந்திரானி புலஸ்தினி என்று அறியப்பட்ட சாரா ஜெஸ்மின் என்பவருக்கு  பாதுகாப்பு வழங்கியமை   அல்லது மறைத்து வைத்தல் என்பனவற்றை குற்றச்சாட்டுகளாக உள்ளடக்கி  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழாக என் டி அபூபக்கருக்கு எதிராக மட்டக்களப்பு  மேல் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


குறித்த வழக்கு   கடந்த 18/07/2024 ம் திகதி அழைக்கப்பட்ட போது   வழக்கு தொடுனர் சார்பாக    பிரதி மன்றாடி யோகான் அபேவிக்கிரம  பிரசன்னமாகியதுடன்   எதிரி சார்பாக  சிரேஷ்ட சட்டத்தரணி   என் எம் ஷஹீட் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக. சட்டத்தரணி முஹம்மட்  சப்றாஸ்  பிரசன்னமாகினார்.


 கடந்த வியாழக்கிழமை வழக்கு அழைக்கப்ட்ட போது பிரதி மன்றாடியார் வழக்கை மேற் கொண்டு நடாத்துவதில்லை என்று விண்ணப்பம் செய்ததை அடுத்து,  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ டீ ஜே பிரபாகரன் வழக்கிலிருந்து எதிரியை முற்றாக விடுவிப்புச் செய்து கட்டளையாக்கினார்.


குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட  முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமார் வருட காலத்திற்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.