பாடசாலைகள் மட்டத்தில் போதை பொருள் பாவனையை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு




 



வி.சுகிர்தகுமார் 


 அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தொடக்கம் பாணம பிரதேசம் வரையாக உள்ள  பாடசாலைகள்  மட்டத்தில் போதை பொருள் பாவனையை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு  கலந்துரையாடல் நேற்று (08 பொத்துவில் பொலிஸ் அத்தியட்சகர் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பொத்துவில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திரு.தேசப்பிரிய  ஏற்பாட்டில் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி என்.சி.எம்.கலீம்மூடின் வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயபத்ம தலைமையில் இடம்பெற்றது....
நிகழ்வில் பாடசாலை மற்றும் சமூகமட்டத்தில் பரவிவரும் போதை பொருள் பாவனையை தடுப்பது  பற்றியும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகரினால் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் மக்கள் இடமிருந்தும் கருத்துகளும் பெறப்பட்டது.

நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் பொத்துவில், பாணம பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகள் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சமூக சிவில் நிருவாகத்திற்கான பொலிஸ் அதிகாரி மற்றும் பாடசாலை சமூகத்தினர் பாடசாலை மாணவர்கள் சிவில் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.....