ஜப்னா கிங்ஸூக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு







 லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் கோல் மார்வெல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Bhanuka Rajapaksa அதிகபட்சமாக 82 ஓட்டங்களை பெற்றதுடன், Tim Seifert 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் Asitha Fernando 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி ஜப்னா கிங்ஸ் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது